தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்திலுள்ள சிப்காட் பகுதியில் அட்டை பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்திருகிறது. இதில் 100-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று தொழிற்சாலைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது தொழிற்சாலையின் உள்ளே இருந்து தீப்பிடித்து புகை வெளியேறியதால் அங்கிருந்த காவலாளி தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை போராடி அணைத்தனர். இதனை தொடர்ந்து விடுமுறை என்பதால் விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் பல லட்சம் மதிப்புடைய பொருட்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.