தொழிற்சாலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிப்காட் பகுதியில் பல தொழிற்சாலைகள் அமைந்திருக்கிறது. இந்நிலையில் கார்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டீல் உருளைகள் டன் கணக்கில் திருடப்பட்டு இருப்பதை கண்டு தொழிற்சாலை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி ஏழு பேரை பிடித்துள்ளனர். இதனை அடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் சிவகுமார், பரசுராமன், டில்லி குமார், குமரேசன், அஜித், தேவராஜ் மற்றும் எல்லப்பன் என்பதும், தொழிற்சாலையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் ஏழு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.