தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் நன்சாங் என்ற நகரம் உள்ளது. இந்நகரில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று ஜெர்மன் நாட்டு நிதி உதவியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென 3. 40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் தீ விபத்தில் சிக்கிய 4 பேரில் மூவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து ஒருவர் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். குறிப்பாக இதுவரை இரண்டு பேரை காணவில்லை. அவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.