Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்? தொழிலாளியின் விபரீத முடிவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிபாளையம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தால் மது அருந்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் செல்வராஜ் வீடு திறக்காததால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து ஜன்னல் வழியே பார்த்தபோது செல்வராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வராஜ் உடலை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |