Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்று வந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கோடங்கிபாளையம் பகுதியில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கர்நாடக மாநிலத்திலுள்ள ஜம்பலிபள்ளி பகுதியில் வசிக்கும் மது என்பவரின் மகன் அய்யன்துரை என்பவர் கடந்த 6 மாதமாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு அய்யன்துரை சென்றுள்ளார். அதன்பின் அய்யன்துரை நேற்று முன்தினம் இரவு கல்குவாரிக்கு திரும்பினார்.

இந்நிலையில் அய்யன்துரை அங்குள்ள தங்கும் அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் பல்லடம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அய்யன்துரையின் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அய்யன்துரையின் அக்கா பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |