Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென ஏற்பட்ட விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் முருகனை உடனடியாக மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த நெல்லை சந்திப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |