Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தொழிலாளி கொலை வழக்கு”… வெளியான பரபரப்பு வாக்குமூலம்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!

தொழிலாளி கொலை வழக்கில் அக்காள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள விண்ணப்பள்ளி குரும்பபாளையம் ராசாத்தி தோட்டத்தில் கூலிதொழிலாளி அண்ணாமலை வசித்து வந்தார். இவருக்கு ராணி என்ற அக்காள் இருந்தார். இவருடைய கணவர் மணி ஆவார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இதில் மணி, அவரது உறவினர் கதிரான் ஆகியோருக்கும் அண்ணாமலைக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது மணியும், கதிரானும் சேர்ந்து அரிவாளின் பின் பக்கத்தால் அண்ணாமலையின் நெஞ்சுப்பகுதியில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அண்ணாமலையின் தாய் ராசாத்தி அங்கு வந்து அவர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை  விலக்கினார். இதனையடுத்து ராசாத்தி தனது மகன் அண்ணாமலையை வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

அதன்பின் அண்ணாமலை சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு உறங்கச் சென்றார். இதனைதொடர்ந்து மறுநாள் காலையில் அண்ணாமலை தன்னுடைய படுக்கை அறையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவரது தாய் ராசாத்தி அதிர்ச்சியடைந்தார்.  இது தொடர்பாக அண்ணாமலையின் தாய் ராசாத்தி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராணி, மணி, கதிரோன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராணி காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் “எனது மகளுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் அண்ணாமலைக்கு பிடிக்காததால் அவர் வரவில்லை. இதன் காரணமாக அண்ணாமலைக்கும் எனக்கும் மனக்கசப்பு இருந்து வந்தது.

கடந்த 2 தினங்களுக்கு முன்பு என் மகள் திருமணம் தொடர்பாக அண்ணாமலை என்னிடம் பேசினார். இதனால் எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நான் மணி, கதிரான் ஆகியோர் அண்ணாமலையை தங்கினோம். இதனை பார்த்த எனது தாய் ராசாத்தி எங்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். அதன்பின் வீட்டுக்கு சென்ற அண்ணாமலை மறுநாள் காலை உறங்கி எழுந்தபோது உயிரிழந்தது தெரியவந்தது. இதன் காரணமாக பயந்துபோன நான், என்னுடைய கணவர் மணி, மற்றும் கதிரான் ஆகிய 3 பேரும் வெளியூர் செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்றோம். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எங்களை கையும் களவுமாக பிடித்து விட்டனர்” என்று அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தின்படி 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Categories

Tech |