Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வாழ்க்கையில் விரக்தியடைந்த தொழிலாளி…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயாமொழி பகுதியில் முண்டசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தங்க நகை பட்டறை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் தச்சு வேலை செய்து வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாததால் வாழ்க்கையில் விரக்தியடைந்த முண்டசாமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் முண்டசாமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் மனவேதனையில் இருந்த முண்டசாமி உடன்குடி மையப்பகுதியில் உள்ள காட்டுக்குள் சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரபட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முண்டசாமியின் உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |