சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு சுகாதார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் தம்பி செல்வம் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அறிவித்த தின கூலி சம்பள நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோஷம் எழுப்பியுள்ளனர்.