Categories
மாநில செய்திகள்

தொழில் மீது பக்தி…. வீட்டை கேமராவாக மாற்றிய கலைஞன்…. வைரலாகும் புகைப்படம்….!!

புகைப்படக் கலைஞர் தனது வீட்டை கேமரா வடிவில் கட்டியுள்ளது சமூக வலைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

கர்நாடக மாநிலத்திலுள்ள ஹோங்கால் என்ற புகைப்பட கலைஞரின் வீடானது வலைத்தளங்களில் மிகவும் புகழ்பெற்று வருகிறது. தூரத்திலிருந்து பார்த்தாலே மிக சிறிய கேமரா போன்று காட்சியளிக்கும் இவ்வீட்டிற்கு கிளிக் என்ற பெயரை வைத்துள்ளார். அதுமட்டுமன்றி கேமரா, ஃப்ளாஸ், படச்சுருள் ஆகிய வடிவமைப்புகளை இவ்வீடு கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரவி ஹோங்கால் கூறும்போது, சிறுவயதிலிருந்தே படபிடிப்பில் மிகுந்த காதல் கொண்டதே இவ்வாறான வீடு உருவாக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் ரவி ஹோங்காலின் வீடு ராட்சச கேமரா போன்று காட்சியளிப்பதால் அனைவரும் அதிசயத்துடன் பார்த்து செல்லுகின்றனர்.

மேலும் தன்னுடைய தொழில் பக்தியை வீட்டுடன் மட்டுமே நிறுத்திக் கொள்ளாமல் அவருடைய மூன்று பிள்ளைகளுக்கும் கேமரா நிறுவனத்தை சார்ந்த பெயர்களையே வைத்துள்ளார். புகழ்பெற்ற கேமரா நிறுவனங்களான நிகான், கெனான், எப்சன் போன்ற பெயர்களை பிள்ளைகளுக்கு வைத்து அழகு கண்டுள்ளார். கேமரா காதலனான ரவி ஹோங்கால் உண்மையான தொழில் பக்தி கொண்டவர் என்றும் வேலையின் மீது கொண்ட காதலுக்கு இவரே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்வதாகவும் வலைத்தளங்களில் பெரும்பாலனோர் பதிவு செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |