கடந்த 1989 இல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக கடினமாக உழைத்து அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் என்னும் தொலைநோக்கி இந்த மாதம் 24 ஆம் தேதி அரேன் 5 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 1989 இல் தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக மிகவும் கடினமாக உழைத்து ஆய்வாளர்கள் உருவாக்கிய ஜேம்ஸ் வெப் என்னும் விண்வெளியை ஆராயும் தொலைநோக்கி அரேன் 5 ராக்கெட்டின் மூலம் பிரபஞ்சத்தில் ஏவப்படவுள்ளது.
இந்த ஜேம்ஸ் வெப் என்னும் தொலைநோக்கி பிரெஞ்சிலுள்ள கயானா என்னும் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து டிசம்பர் மாதம் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக நாசா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் 1960 ஆம் ஆண்டு பல விண்வெளி செயல்பாடுகளுக்கு உந்து கோலாக இருந்த ஜேம்ஸ் இ.வெப்பை போற்றும் விதமாக இதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இந்த தொலைநோக்கி விண்ணில் ஏவப்பட்ட பின் பிரபஞ்சத்தில் நடக்கும் பல வினோத நிகழ்வுகளை நாம் எளிதில் அறியலாம் என்றும் நாசா தெரிவித்துள்ளது.