நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புளியும்பாறை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேவாலா, பந்தலூர், பகுதிகளில் இன்றும் கனமழை தொடருவதால் புலியும்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கோழிக்கொல்லி கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக்கிராமத்தில் உள்ள 300-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். தேவாலா பகுதியில் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து மீண்டும் பாதிக்கப்பட்டது.