Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தொடர்ந்து சாதிக்கும் அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் … டுவிட்டரில் வெளியான மேக்கிங் வீடியோ…!!!

அல்லு அர்ஜுனின் ‘புட்ட பொம்மா’ பாடல் யூட்யூபில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர் கூட்டங்கள் ஏராளம் . கடந்த ஆண்டு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் அலவைகுண்டபுரமலோ. 100 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் அடித்தது ‌. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் தெலுங்கில் மட்டுமல்லாது தமிழில் ரசிகர்களையும் கவர்ந்தது ‌ .

பட்டி தொட்டி எங்கும் பரவிய இந்த பாடல் பலரது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், காலர் டியூனாக இருந்து அசத்தி வந்தது . இந்நிலையில் புட்ட பொம்மா பாடல் யூ டியூபில் 500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என  தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடும் வகையில் ‘உங்களுக்கான சர்ப்ரைஸ் இதோ’ என புட்ட பொம்மா பாடல் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது. தற்போது இணையத்தில் இந்த மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது .

Categories

Tech |