Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து வரும் கொள்ளை…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

தொடர்ந்து கோவில் உண்டியலை கொள்ளையர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள ஆ. பாளையம் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்நிலையில் பூசாரி மருதமுத்து வழக்கம் போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் வந்து பார்த்த போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் தொடர்ந்து கோவிலின் உண்டியலை கொள்ளையர்கள் திருடி வந்தனர். இச்சம்பவம் காவல்துறையினருக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து 3 நாட்களாக ராமநாத்தம் சுற்றியிருக்கும் பகுதிகளில் கொள்ளையர்கள் கோவில்களை குறி வைத்து கொள்ளையடித்து வரும் சம்பவம் பொதுமக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |