மேற்கு வங்க தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தொடர்ச்சியாக 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மீண்டும் பதவி ஏற்கவுள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மம்தா முதலமைச்சர் பதவி ஏற்ற நிலையில் அமைச்சர்கள் அனைவருக்கும் இன்று பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து 43 அமைச்சர்களில் 19 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளார். மேலும் இந்த முறை சற்று வித்தியாசமாக அனுபவமிக்கவர்கள் மற்றும் புது முகங்களை கொண்ட அமைச்சரவையை மம்தா பானர்ஜி உருவாக்கியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து 2 முறை மந்திரி சபையில் பதவி வகித்த அமித் மித்ரா நிதி மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார்.