Categories
தேனி மாவட்ட செய்திகள்

யாரும் செல்லக்கூடாது…. தொடர் கனமழை…. அதிகாரிகள் எச்சரிக்கை….!!

தொடர் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் 2-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதில் வைகை அணை நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழ் சென்றுள்ளது.

தற்போது பரவலாக மழை பெய்வதால் பாசனத்திற்கான தண்ணீர் நிரப்பப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து 2790 கன அடி வரை இருக்கிறது. இதிலிருந்து 69 கன அடி மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்பின் நீர்மட்டம் 66 அடியை எட்டிய காரணத்தால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து நீர்மட்டம் 67.03 அடியாக உயர்ந்தால் இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் என கூறப்படுகிறது.

இந்த தொடர் மழையால் சுருளி மற்றும் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரகா நதி, முல்லைப்பெரியாறு மற்றும் கொட்டக்குடி ஆறு என அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் இருகரைகளையும் தொட்டபடி செல்லுவதால் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், துணி துவைக்க மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Categories

Tech |