Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதனால் பல நோய்கள் வரும்… உணவு பாதுகாப்பு துறை அதிகாரி… விழிப்புணர்வு கூட்டம்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாமை வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்தது நடத்தியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த நிழ்ச்சியில் கடை உரிமையாளர்கள், அதிகாரிகள் என பலரும் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்டத்தில் அனைத்து கடை உரிமையாளர்களும் கடையில் பணிபுரியும் ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கொரோனா இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் டீ கடைகள் மற்றும் உணவகங்களில் பழைய எண்ணெய்களை கொண்டு உணவு மற்றும் வடைகளை தயாரிக்க கூடாது எனவும், அந்த எண்ணெய்களை உபயோகிப்பதால் இதய கோளாறு மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படும் எனவும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |