ராமநாதபுரம் மாவட்டத்தில் சி.ஐ.டி.யூ குடிநீர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், நரிப்பையூர் பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கியுள்ள நிலையில் கீழப்பருத்தியூர், கிடாதிருக்கை, கீழாம்பல், பனைக்குளம்,பொட்டகவயல், உத்திர கோசமங்கை, பெருங்குளம், சேரந்தை, சிக்கல், உரத்தூர், கருமாள், நல்லிருக்கை, கரிசல்புளி ஆகிய பகுதிகளிலும் உப்புநீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் அந்த திட்டங்கள் அனைத்தையும் நிறுத்தப்போவதாக அரசு தரப்பில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த திட்டங்களை நிறுத்தினால் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் எனவும், இத்திட்டங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. ஆகையால் உப்புநீரை குடிநீராக்கும் திட்டங்களை மூடக்கூடாது என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் சி.ஐ.டி.யூ குடிநீர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் சிவாஜி தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மேற்கண்ட கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர்கள், சங்க மாவட்ட செயலாளர் மலைராஜன் மற்றும் 300 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு மனு அளித்துள்ளனர்.