பாண்டியன் ஸ்டோர் சீரியல் வரும் முல்லை கதாபாத்திரத்தைப் பற்றி நடிகை காவியா முதல் முறையாக பேசியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்பப் பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்டவற்றை கொண்டு எடுக்கப்பட்டு வரும் இத்தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில நாட்களுக்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின்னர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை காவியா தேர்வு செய்யப்பட்டார்.அதன்படி அவர் இப்போது முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் காவியா முல்லை கதாபாத்திரத்தைப் பற்றி முதல் முறையாக பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, “பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரம் பெரிய வரவேற்ப்பை பெற்றிருந்தது. நடிகை சித்ரா அந்த கதாபாத்திரத்திற்கு அழகாக உயிர் கொடுத்து நடித்திருந்தார். அதை நான் எப்படி ஈடு செய்யப் போகிறோம் என்று அச்சத்தில் இருந்தேன்.
மேலும் முல்லை கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஆனால் தற்போது ரசிகர்கள் காட்டும் ஆதரவு எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் இனி தொடர்ந்து முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பேன்” என்று தெரிவித்துள்ளார்