Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசி தாராளமாக பயன்படுத்தலாம்… உலக சுகாதார அமைப்பு பரிந்துரை…!

உலக சுகாதார அமைப்பு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2000 பேருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட மறுத்துவிட்டனர். இதனால் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் தடுப்பூசியை மறு ஆய்வு செய்தனர்.

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தளவு பாதுகாப்பை கொடுத்தாலும், அது ஒருவரின் மரணத்தில் இருந்து காக்கும் திறன் கொண்டது. அனைத்து வைரஸ்களுக்கும் எதிராக செயல்படும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 60 வயது மேற்பட்டவர்களுக்கு ஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்தவும் அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது.

Categories

Tech |