Categories
தேசிய செய்திகள்

இத கூட விட்டு வைக்க மாட்டீங்களா…? சுடுகாட்டிலிருந்து துணிகளை திருடி… “புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை”…!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு திருட்டு கும்பல் சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் உடலை வெளியே எடுத்து அவர்களின் ஆடைகளை திருடி விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பல உயிர்களை பறித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த திருட்டு கும்பல் ஒன்று சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்களின் உடல்களை வெளியில் எடுத்து அவர்களின் ஆடைகளை திருடி அந்தத் துணிகளை துவைத்து சலவை செய்து ஏதேனும் ஒரு நிறுவனத்தின் ஸ்டிக்கரை ஒட்டி அதை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து போலீசார் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அவர்கள் சுடுகாட்டில் உள்ள படுக்கை விரிப்பு மற்றும் ஆடைகளை திருடியது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து 520 பெட்சீட், 127 குர்தாக்கள், 52 புடவைகளை கைப்பற்றினர். மேலும் இந்த சம்பவத்திற்கு அப்பகுதியில் இருக்கும் சில ஆடை வியாபாரிகள் திருடர்களுக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் வழங்கியுள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |