தூதுவளைப்பொடி
தேவையான பொருட்கள் :
தூதுவளை இலை – 2 கப்
உளுத்தம்பருப்பு – 1/4 கப்
துவரம்பருப்பு – 1/4 கப்
பெருங்காயம் – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 6
எள் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் தூதுவளை இலைகளை சுத்தம் செய்து நன்கு உலர வைக்கவும். ஒரு கடாயில் எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். மிளகாயையும் வறுத்து எடுக்க வேண்டும் .பின் தூதுவளை இலைகளை நன்றாக வதக்கி, ஆறியதும் பருப்பு, மிளகாய், எள், உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும். இப்போது தூதுவளைப் பொடி தயார் !!!