மாணவர்களின் திறனை கண்டறியவே பிற மாநிலங்களை பின்பற்றி தமிழகத்திலும் ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய பட்டயக் கணக்காளர் அமைப்பின் ஏழாவது மெட்ரோ கருத்தரங்கில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்,
தனியார் பள்ளிகளில் அதிக கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு வார விடுமுறைகளில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் அங்கு பயிலும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதாக தெரிவித்தார். எனவே அரசு பள்ளி மாணவர்களின் திறனை கண்டறியும் பொருட்டு 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அது குறித்து யாரும் கவலை பட தேவையில்லை என்று தெரிவித்தார்.