நாளைய தினம் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு காவல்துறை தடை வித்திட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்றோடு நிறைவடைய இருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஊரடங்கை மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ஆம் வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார்.
இதனிடையே தமிழகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசின் அணுகுமுறை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக திமுக சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
ஏப்ரல் 15ஆம் தேதி ( நாளை ) காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு நடத்த சிக்கல் எழுந்தது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் சார்பில் 144 தடை அமலில் உள்ளதால் கூட்டம் நடத்துவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளுக்கு உட்பட்டு கூட்டம் நடக்கும் என்று திமுக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவும் நிலையில் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ளதால் அதனை முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய அரசியல் கட்சியே இப்படி வேணும் என்று, அரசியல் செய்வதற்காக கூட்டம் நடத்த முயல்வது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. காவல்துறை திமுக கூட்டத்திற்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்க : அரசியல் செய்த ஸ்டாலின்….. செக் வைத்த எடப்பாடி…. ஏமாந்து போன திமுக …!!