Categories
உலக செய்திகள்

கொரானா பாதிப்பில் இருந்து மீண்ட சீனாவில் இந்த மாமிசம் மட்டும் உண்ண தடை.!!

கொரானா என்ற கொடிய வைரஸ் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் முதல் முதலில் கண்டறியப்பட்டது. இந்த தொற்று சர்வதேச அளவில் 9,35,000க்கும் அதிகமான மக்களை பாதித்தது. மேலும் இந்த தொற்று காரணமாக 47,000 பேர் சர்வதேச அளவில் உயிரிழந்துள்ளனர். தற்போது சீனா கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவந்ததையடுத்து அந்நாட்டில் மீண்டும் இயல்பாக நாய், பூனை ,பாம்பு மற்றும் வௌவ்வால் கறிகள் விற்பனை சமீபத்தில் களைகட்ட தொடங்கியது.

வூகான் நகரில் வௌவால், பாம்புகளோடு சேர்த்து புனுகுப்பூனை போன்றவை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில் நாய்கள் மற்றும் பூனைகளை சாப்பிடுவதற்கான தடை மே 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று தென்சீன தொழில்நுட்ப மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |