Categories
சற்றுமுன் புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இதான் முடிவு…! ”ஃபுல் வாங்கு” இல்ல ”ஹாஃப் வாங்கு” புதுக்கோட்டையில் உத்தரவு …!!

நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்க இருக்கும் நிலையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதில் வெளிமாநிலங்களுக்கு சென்று ஏராளமான மதுபிரியர்கள் மதுவை வாங்கி வரும் நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகளை அனைத்தும் கண்டனம், எதிர்ப்பு தெரிவித்ததனர். சிலர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 

தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். மொத்தமாக வரக்கூடாது. வயதுக்குக்கேற்ப நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு ஃபுல் அல்லது இரண்டு ஹாஃப் மட்டுமே விற்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதே போல தான் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் மது பிரியர் ஒருவருக்கு ஒரு ஃ புல் மட்டுமே விற்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |