தமிழக அரசின் நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜி, மக்கள் விரும்புகின்ற நலத்திட்டங்களை செயல்படுத்தக்கூடிய முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக நல்லாட்சியை நடத்துகின்ற மாண்புமிகு தளபதி அவர்கள், மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழகத்தில் செயல்படுத்த விட மாட்டார், செயல்படுத்த மாட்டார்.
எனவே ஆழியாறு தண்ணீர் பிரச்சினை பொறுத்தவரை கோவை மாவட்ட மக்கள், திருப்பூர் மாவட்ட மக்கள், அந்த விவசாய பெருமக்கள் பொதுமக்களுடைய எண்ணங்களின் படி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சிறந்த நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பார் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எதற்கும் நாம் போராட்ட களத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, போராடி தான் பெற வேண்டும் என்ற அரசு அல்ல இந்த திராவிட மாடல் அரசு, மாண்புமிகு முதலமைச்சர் உடைய அரசு.கேட்கின்ற திட்டங்களையும் தரக்கூடிய முதலமைச்சர், கேட்காத திட்டங்களையும் தரக்கூடிய முதலமைச்சர் நம் முதலமைச்சர்.
எனவே கோவை ஆழியாறு தண்ணீர் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி தருவார்கள். அரசனுடைய நலத்திட்டங்களை அரசியல் ஆக்காமல் இங்கு கோவைனுடைய வளர்ச்சிக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தக்கூடிய திட்டங்களை பெறுகின்ற நாம் என்றும் அவருக்கு அரணாக இருந்து உறுதுணையாக இருந்து கரம் கோர்ப்போம்.