அசுரன் படம் நடிகையின் மகளை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி தயார் என்று கூறி வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் திலீப் மற்றும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் ஆகிய இருவரும் காதலித்து கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்களது குடும்ப வாழ்க்கை நீடிக்காமல் கடந்த 2015ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன்பின் நடிகர் திலீப், நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து செய்து பிரிந்த திலீப் மற்றும் மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாக்ஷி என்ற மகள் இருக்கிறார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் எடுத்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சிகப்பு நிற ஆடை அணிந்து அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அடுத்த கதாநாயகி தயார் என்று கமன்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CSOAo82pQ0U/