கொரோனா குறித்து இதுவரை கண்டறிந்துள்ள தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்துகளும் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தோன்றிய இடத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திற்கு சென்றனர்.
அங்கு கொரோனா வைரஸ்க்கு தொடர்புடைய பகுதிகளில் சோதனை செய்தனர். கடல் உணவு சந்தை, தடுப்பூசி தயாரிக்கும் இன்ஸ்டியூட் ஆஃப் வைராலஜி உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் ஆய்வு செய்தனர். இதன் மூலம் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது என்று ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இத்தகவல்கள் குறித்து மாலை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.