Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்தா அறிவிச்சுட்டாங்க….. ”எக்கசக்க மத்திய அரசு வேலை” வெளியிட்டது SSC …!!

வருகின்ற 2020_ஆம் ஆண்டுவரை SSC சார்பில் வெளியாகும் எக்கச்சக்க மத்திய அரசு வேலை முழு தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள காலி அரசு பணியிடங்களை  எப்படி T.N.P.S.C எப்படி தேர்வு நடத்தி மாநில காலிப்பணியிடங்களை நிரப்புகின்றதோ அதே போல மத்திய அரசு வேலைக்கு S.S.C தேர்வு நடத்தி அதில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் உடனே மத்திய அரசு பணி கிடைக்கும்.அந்த வகையில் விண்ணப்பதாரர்கள் மற்றும் தேர்வர்களுக்கு எளிமையாக இனி வரும் காலங்களில் அடுத்தடுத்து என்னென்னெ தேர்வு நடைபெற இருக்கின்றது என்ற அட்டவணையை SSC வெளியிட்டுள்ளது.இதில் இந்த அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை மொத்தம் 26 தேர்வுகள் நடத்தப்பட இருக்கின்றது.

இதில் பிளஸ் டூ முதல் இன்ஜினியர் , பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை பயன்பெறும் வகையில் பணிகளுக்கான தேர்வு அறிவிக்கப்பட இருக்கின்றது. அதில், மல்டி டாஸ்கிங் பணி , மொழி பெயர்ப்பாளர், ஜூனியர் இன்ஜினியர், ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு தகுதிக்கான தேர்வு, ஒருங்கிணைந்த பிளஸ் டூ படிப்பு தகுதிக்கான தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்தர், டெல்லி போலீஸ் வேலை, சப் இன்ஸ்பெக்டர் பணி உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் நடைபெற இருக்கின்றது. தேர்வுக்கு முன்னக்கூட்டியே தயாராகும் வகையில் SSC தேர்வு விவரங்களை வெளியிட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களுடைய தேர்வு கால அட்டவணையை பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும் : https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/calender2019_25012019.pdf

Categories

Tech |