Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே!… நடிகர் அஜித்தா இது…. பள்ளி பருவத்தில் எப்படி இருக்கார் பாருங்க….. ப்ளூ சட்டை மாறன் வெளியிட்ட கலக்கல் வீடியோ…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து துணிவு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அசுரன் படத்தில் நடித்து புகழ்பெற்ற மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் இறுதி கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ‌

இந்நிலையில் நடிகர் அஜித்தின் அன்சீன் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 1990-ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக முதன் முதலில்  நடிகர் அஜித் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் அஜித் பள்ளி படிக்கும் மாணவனாக நடித்திருப்பார். இது தொடர்பான வீடியோவை தற்போது ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவானது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையதளத்தில்வைரலாகி வருகிறது.

Categories

Tech |