திமுக இளைஞரனி சார்பாக நடந்த பாசறை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இளைஞரனி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அன்பரசு அண்ணன் அவர்கள் பேசும்போது சொன்னார்கள் இன்றோடு முடிகிறது என்று, அண்ணன் ஜெயராஜன் அவர்கள் பேசும் போதும் சொன்னார்கள் ஒரு சுற்று முடிகிறது என்று, இது முடிவல்ல இதுதான் ஆரம்பம். இங்கு பேசும் பொழுதெல்லாம் சொன்னார்கள்… அண்ணன் பாலு மாமா அவர்கள் சொன்னார்கள்….
கடந்த பாராளுமன்ற தேர்தல் ஆரம்பித்து நான்கு தேர்தலாக நான் பிரச்சாரம் செய்து வருகிறேன், வெற்றிக்கு முக்கிய காரணம் என்று…. மன்னிக்கவும் அதற்கு நான் காரணம் அல்ல, அந்த வெற்றிக்கு எல்லாம் ஒரே காரணம் கலைஞர் வழியில் வந்த நம்முடைய தலைவர். இன்னும் பெருமையாக சொல்லனும்னா, நான் செல்லும் இடமெல்லாம் அந்த சிறப்பான வரவேற்பை அளித்து,
எழுச்சியான வரவேற்பு அளித்த இளைஞர் அணி தம்பி மார்கள் ஆகிய நீங்கள், தலைவருடைய பிரச்சாரத்தையும் என்னுடைய பிரச்சாரத்தையும் மக்களிடையே எடுத்துச் சென்று அதை எல்லாம் வாக்குகளாக மாற்றி அந்த மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்ததிலேயே இளைஞரணிக்கு மிக மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
அண்ணன் அன்பரசன் அவர்கள் என்னிடத்திலே தேதி வாங்கும் பொழுது உன் பயிற்சி பாசறை கூட்டத்தில் பெருசா கலந்துக்கறது இல்ல, நான் முதல் கூட்டத்தில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு சென்ற மாதம், திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட நம்முடைய அக்கா அருள்மொழி அவர்கள் பேசிய கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அண்ணன் வேலு அவர்களுடைய வேண்டுகோளை ஏற்று அன்பரசன் அவர்கள் உரிமையோடு என்னிடம் வந்து தேதி கேட்டார் என தெரிவித்தார்.