செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசும் போது, மனுஸ்மிருதி நாம் பேசக்கூடிய விஷயங்கள் எல்லாமே மொழி பெயர்ப்பு தான். எந்த மனுஸ்மிருதியை யார் மொழிபெயர்த்தார். ஒரிஜினல் மனுஸ்மிருதி என்ன ? யாரோ ஒரு ஆங்கில பாதிரியார், மதமாற்றத்திற்காக மொழிபெயர்த்த பூக்கை…
இவங்களாகவே செலக்ட் பண்ணி, இவங்களா தப்பான கருத்துக்களை நுழைச்சு, இவங்களாகவே மொழிபெயர்த்து, மொழிபெயர்த்த இங்கிலீஷ்ல இருந்து, திரும்பவும் தமிழ்ல மொழிபெயர்த்து, அண்ணன் திருமாவளவன் அவர்கள் கொடுக்குறாங்க. அவருக்கு வேலை இல்லை என்று தான் நான் சொல்லுவேன். அவர் ஆர்எஸ்எஸ்_ஸை போய் பார்த்து இருக்காரா ? அம்பேத்கர் அவர்கள் முதல் முதலாக ஒரு ஆர்எஸ்எஸ் கேம்புக்கு போயிட்டு, என்ன சொல்லி இருக்கார் ? என்பதை திருமாவளவன் அவர்கள் படிக்க வேண்டும்.
அம்பேத்கர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஐ முதலில் எப்படி பார்த்தார் ? அதேபோல இந்தியா – சீனா போர் நடந்த போது, பண்டித ஜவஹர்லால் நேரு கிட்ட போயி, ஆர்எஸ்எஸ் நாங்கள் முன்களத்தில் வேலை செய்கிறோம் என்று சொன்ன பொழுது, ஜவஹர்லால் நேருவிற்கு – அவர்களுக்கும் இடையில் தொடர்பு எப்படி இருந்தது ?
ஆர்.எஸ்.எஸ்-ஐ செங்கோட்டையில் நடந்த ஒரு பேரணிக்கு, பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் அழைத்ததார். ஆர்.எஸ்.எஸ்சினுடைய பல செயல்பாடுகளில் இதுவும் ஒன்று. ஆனால் ஆர்எஸ்எஸ்_சின் பெரிய பிரச்சனை என்னவென்றால், அவங்க அரசியல் பேச மாட்டாங்க. ஒரு பிரஸ்மீட் வச்சு யாரையும் வறுத்தெடுக்க மாட்டாங்க. என்ன சொன்னாலும் ? அதைக் கேட்டுக் கொண்டு பொறுமையாக செல்லக்கூடிய இயக்கம் ஆர்எஸ்எஸ் இயக்கம் என தெரிவித்தார்.