நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இறப்பை தெரிவிப்பதில் நடைபெற்ற இந்தத் தவறின் தீவிரத்தை ஏதோ ஒரு அதிகாரியின் தலையில் பழி போட்டு தப்பிக்க முடியாது. அரசு இதற்கு பொறுப்பேற்க வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற முறையில் சில முக்கிய கேள்விகளை மாண்புமிகு முதலமைச்சர் இடத்தில் நான் கேட்க விரும்புகின்றேன். இந்த கேள்விக்கான பதில் எனக்காக மட்டும் இல்ல, அது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் அதனால் இந்த கேள்விக்கு நான் கேட்க விரும்புகிறேன்.
கொரோனா நோய் தடுப்பில் அரசு சிறப்பாக பணியாற்றுகிறது என்றும் சமூக பரவல் இல்லை என்று சொல்வது உண்மை என்று சொன்னால் ஏன் கொரோனா நோய்த்தொற்று தினமும் ஏணிப்படிகள் போல அதிகரித்துக்கொண்டே செல்கின்றது……
கொரோனவை ஒழிக்கின்றோம் என்ற பெயரில் பொய் பேட்டிகளை நிறுத்திட்டு மேல்நோக்கி உயர்ந்து கொண்டே போகும் கொரோனா நோய் தொற்று வரைபடத்தை தட்டையாக்குவதற்கு, குறிப்பாக. சென்னையில அப்படி செய்வதற்கான செயல்திட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்?…
ஊரடங்கு காலத்தில கமிட்டி மேல் கமிட்யை நியமித்துள்ளீர்கள். ஆனால் இதுவரையில் எந்த கமிட்டி அறிக்கையும் பொது வெளியில் இல்லை. பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று மக்களை எத்தனை நாளைக்கு ஏமார்த்த போறீங்க.?….
இந்த நெருக்கடியான நேரத்தில், ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க உத்தரவாதம் அளித்த எதிர்க்கட்சிகள், நிபுணர்கள், சம்மந்தப்பட்டவர்கள் ஆகியோரிடம் கலந்து பேச அரசு தொடக்கத்திலிருந்து மறுத்து வருகிறது அதற்கு என்ன காரணம்?….
பேட்டிகள், பெயரளவு அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கொரோனா அறிவிப்புகளை நிறுத்திவிட்டு கொரோனா பேரிடர் விளைவாக நிதிநிலை அறிக்கையை செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகளை மாற்றியமைப்பது, பொருளாதாரத்தை மீட்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவது உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் எப்பொழுது இந்த அரசு ஆர்வம் காட்ட போகிறது…..
இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள். மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளை தான் நான் இப்போ கேட்டு இருக்கேன். இது அரசியல் கேள்விகள் அல்ல, அரசியலுக்கான கேள்விகளை அல்ல, மக்களின் உயிர் சம்பந்தமான கேள்விகள். மக்களின் வாழ்க்கை தொடர்புடைய கேள்விகள், இதற்க்கு நேர்மையான பதிலை தமிழக அரசு தர வேண்டும். உண்மையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்களின் சார்பாக தமிழக அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். மக்களை காக்கும் பொறுப்பு அரசின் கையில்தான் இருக்கிறது என்பதை ஊடகங்களின் வாயிலாக அரசுக்கு நான் நினைவூட்டவே உரையாற்றி இருக்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.