Categories
மாநில செய்திகள்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ சேரப் போறீங்களா?… அப்போ இது உங்களுக்குத்தான்…!!

எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளுக்காக விண்ணப்பிக்க அரசு செப்டம்பர் 18ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு ஆல் பாஸ் என அரசு உத்தரவு தெரிவித்திருந்தது. மேலும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வுக்கு உரிய கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் அனைவரும் பாஸ் எனவும் அரசு தெரிவித்திருந்தது. தற்பொழுது கல்லூரி பள்ளிகளில் மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவை தொடங்கியுள்ளது.

 http://www.gct.ac.in/https://www.tn-mbamca.com/ இணையத்தளங்களில் மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை விண்ணப்பித்து வருகின்றனர். இந்த விண்ணப்பங்களுக்கான் காலக்கெடு செப்டம்பர் 28 ஆம் நாள் வரை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறை முழுவதுமாக இணையவழியாகவே நடைபெற இருக்கிறது.

 

Categories

Tech |