தமிழகத்தில் திமுக அரசு வேலை வாய்ப்புகளை குறைப்பது வேலையில்லா திண்டாட்டத்தினை உருவாக்கும் என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றால், 3.5 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும், புதிதாக இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும், என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது. இப்படி வாக்குறுதி அளித்த திமுக அரசு தற்போது அரசு பணிகளை எல்லாம் தனியார் மயமாக்குவது கண்டனத்திற்குரியது. எனவே தனியார் மையமாக்கும் அரசின் கொள்கைகளை உடனடியாக கைவிட வேண்டும்.
மாநகராட்சி பணிகளை தனியார் மையமாக்கும் ஆணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரசு மற்றும் அரசு சார்ந்த அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்புவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட கட்சிகளின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"மூன்றரை இலட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்; புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்றெல்லாம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, தற்போது அரசுப் பணிகளையே தனியார்மயமாக்கிக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது! pic.twitter.com/WKUTDSkKP5
— O Panneerselvam (@OfficeOfOPS) November 7, 2022