Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!….. பிக் அப் டெலிவரி சேவையை இப்படி கூட யூஸ் பண்ணலாமா….? எப்படில்லாம் யோசிக்கிறாங்பா….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மையம் ஆகிவிட்டது. தற்போது ஷாப்பிங் முதல் பண பரிவர்த்தனைகள் வரை அனைத்துமே பெரும்பாலும் இணையதளங்களில் தான். அந்த வகையில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உணவுப் பொருட்கள் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி வந்துவிடும். இதேபோன்று ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு பிரபல ஸ்விகி நிறுவனம் ஜீனி என்ற அம்சத்தை நடைமுறையில் வைத்திருக்கிறது. இதே சேவையை டான்சா என்ற நிறுவனம் முழு நேரமாகவே செய்து வருகிறது.

அதன்படி பொதுவாக அவசரத்தில் வீட்டில் இருந்து கிளம்பும்போது ஏதாவது செல்போன், சாவி போன்ற முக்கிய பொருட்களை மறந்து வைத்து விட்டு சென்று விடுவோம். இந்த பொருட்களை எடுப்பதற்காக நாம் மீண்டும் வீட்டிற்கு வருவது அலைச்சல் ஆகிவிடும். ஆனால் நாம் ஒரு பொருளை மற்றொரு இடத்தில் கொண்டு செல்வதற்கு ஆன்லைனில் புக் செய்தால் உடனே ஒருவர் வந்து நம் வீட்டில் இருக்கும் பொருளை வாங்கிக்கொண்டு யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுத்து விடுவார். இந்த பிக்அப் டெலிவரி மூலம் உணவு பார்சல், முக்கிய ஆவணங்கள் மற்றும் சாவி போன்ற பொருட்களை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இப்படி ‌ பொருட்களை மட்டும் தான் டெலிவரி செய்வார்களா என்று நினைக்கும் நிலையில் ஒருவர் ஆப்பிள் நிறுவனம் தனக்கு முறையாக பதில் அளிக்காததால் அந்த நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு பேசுவதற்காக ஸ்விகி மற்றும் டான்சாவின் உதவியை நாடியுள்ளார். அதாவது தனக்கு பதிலாக ஆப்பில் நிறுவனத்திடம் பேசுவதற்கு ஆன்லைனில் ஒருவரை புக் செய்து ஆப்பிள் நிறுவனத்திடம் சென்று பேசுமாறு அனுப்பி வைத்துள்ளார். அந்த நபரும் கஸ்டமர் சொன்னது போன்ற ஆப்பிள் நிறுவனத்திடம் பேசி உள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் தற்போது ஒரு பதிவு வைரலாகி வருகிறது. மேலும் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் ஆகா இந்த முறை மிகவும் நன்றாக இருக்கிறது. பிக்கப் டெலிவரி சேவையை இப்படி கூட பயன்படுத்தலாமா என்று வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Categories

Tech |