ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். அப்போது தன்னுடன் போட்டி போட்டவரின் முகத்தில் ரோஜா ஒரு குத்து விட்டார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, ரோஜா குத்தியதை பார்த்து அங்கிருந்தவர்கள் உற்சாக குரல் எழுப்பினர். மேலும் கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்ட ஒரு விழாவில் அமைச்சர் ரோஜா மேடையில் பெண்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.