எம்ஜிஆரின் பழைய புகைப்படத்தில் உள்ள சிறுவன் தற்போது எவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் தெரியுமா அதை குறித்து இதில் பார்ப்போம்.
சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்து எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார். அண்ணாதுரை இறந்த மூன்று ஆண்டுகளில் திமுகவை விட்டு பிரிந்தார். எம்ஜிஆர் அதை அடுத்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அது இப்போது அதிமுக என்ற மாபெரும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. எம்ஜிஆர் ஆட்சியை கொடுப்போம் என்று தான் இன்றளவும் பலர் கூறி வருகின்றனர்.
அந்த அளவிற்கு எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் மக்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளனர். திரைப்பட நடிகராக இருந்தாலும் முதலமைச்சரான முதல் நபர் இவர்தான். பல நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட எம்ஜிஆர் 1987 அன்று டிசம்பர் 24 மரணமடைந்தார். எம்ஜிஆரின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் ஒரு குழந்தையை தூக்கி வைத்த வண்ணம் இருப்பார். அது வேறு யாருமல்ல நம்ம நடிகர் சூர்யா தான். அவர் அருகில் அவரது தந்தை சிவக்குமார் நிற்பதையும் பார்க்கலாம்.