தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
பூண்டு – 8
வரமிளகாய் – 5
சின்னவெங்காயம் – 3
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
கடுகு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
பெருங்காயத்தூள் – சிறிது
செய்முறை :
முதலில் வெங்காயம் , பூண்டு , வரமிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , கறிவேப்பிலை , உளுந்தம்பருப்பு , பெருங்காயத்தூள் , உப்பு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின் எண்ணெய் தெளிய இறக்கினால் சூப்பரான சட்னி தயார் !!!