Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் இந்த செயல் சரியில்லை… எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்… மியான்மரில் பரபரப்பு…!

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை ராணுவத்தினர் சிறைபிடித்தனர்.மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல உலக நாடுகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டில் உள்ள அனைத்து விமானிகளுக்கும் என்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருப்பதாவது, வரும் மே 31-ஆம் தேதி வரை அனுமதியின்றி யாரும் உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்க கூடாது. மேலும் விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |