கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகள் குறித்து குணமடைந்த வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் தான் குணம் அடைந்தது குறித்து வீடியோ ஒன்றை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
அதில் அவர் பேசியதாவது, நோயிலிருந்து குணமடைவது என்பது மிக சுலபமான ஒன்றுதான். அது மற்ற காய்ச்சலைப் போல சாதாரணமான ஒன்று. இதற்கு ஆரோக்கியமான உணவு, கபசுரக் குடிநீர், மன தைரியம் இந்த மூன்றும் இருந்தால் போதும், நாம் கொரோனாவிலிருந்து சுலபமாக குணம் அடைந்து விடலாம் என அவர் தெரிவித்துள்ளார். தேவையற்ற பதற்றமும், பயமும் நம்மை கொன்றுவிடும். எனவே தன்னம்பிக்கையுடன் நோயை எதிர்கொண்டு இந்த கொரோனாவை நம் நாட்டு மக்கள் விரட்ட வேண்டும் எனவும் அந்த வீடியோவில் அவர் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.