Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலையில் போலி இ-பாஸ் …. கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் …..!!

திருவண்ணாமலையில் போலியாக இ-பாஸ் தயாரித்து கொடுத்த கம்ப்யூட்டர் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டது.

டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் வேங்கிக்கால் பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்பவர் வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல இ-பாஸ் இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரப்பி வந்துள்ளார். மேலும் நீ பாஸ் மற்றும் கார் வாடகை என ஒவ்வொருவரிடமும் தலா 4,500 ரூபாய் வரை வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களும் பணத்தை தந்து அவரது காரில் பயணம் செய்து வந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகே செயல்பட்டு வரும் கம்ப்யூட்டர் கடையில் போலியாக இ-பாஸ் வழங்குவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள்  போலி இ-பாஸ் அழைத்து வந்ததைக் கண்டுபிடித்ததால் அந்த கடைக்கு சீல் வைத்து கணினிகளையும் பறிமுதல் செய்தனர். அரசு விதிகளை மீறி சமூகவலைத்தளங்களில் போலி இ-பாஸ் குறித்து பதிவிட்ட விக்ரம் மீது சட்ட நடவடிக்கை பாயும் என மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளர்.

Categories

Tech |