Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரி தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு!

வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் அமைக்கப்பட்டிருக்கும் திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்தார்.

புதுச்சேரி வெங்கட்டா நகர் தமிழ் சங்க கட்டடத்தில் நான்கரை அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதன் திறப்புவிழாவில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்துவைத்தார்.

பின்னர், விழாவில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி,புதுச்சேரி மாநிலம் சார்பாக திருவள்ளுவர் புகழை பரப்புவதற்காகவும் உலகமெங்கிலிருந்தும் புதுச்சேரி வரும் சுற்றுலாப்பயணிகள் திருவள்ளுவர் புகழை தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழை வளர்ப்பதில் புதுச்சேரி அரசும் அரசியல் கட்சிகளும் புதுச்சேரி எழுத்தாளர்கள், கவிஞர்கள் தமிழை வளர்க்க செயல்பட்டு வருகின்றனர் என்றார்.

விழாவிற்கு தமிழ் சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன், பட்டிமன்ற நடுவர் அப்துல் காதர் சிறப்புரை ஆற்றினர். சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், கமலக்கண்ணன், மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், சிவா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் விஜயராகவன், முன்னாள் நீதிபதி சேதுமுருகபூபதி, முன்னாள் எம்.பி.,திருநாவுக்கரசு, புதுச்சேரி அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். மேலும், மாணவர்கள் திருவள்ளுவர் வேடமிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Categories

Tech |