Categories
பல்சுவை

உலகம் போற்றும் வள்ளுவரின்…. சிறப்பு வரலாறு….!!!

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு…

அகர முதல என தன் குரலில் தொடங்கி 1330 குறள்களை தந்து அதன் மூலம் மக்களுக்கு தன நன்னெறிகளை  உணர்த்தியவர் தான் திருவள்ளுவர். மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை, தனது 133 அதிகாரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இன்று உலகப் பொதுமறை என்று அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது, தமிழர்களாகிய நமக்கு மிகப் பெரும் பெருமை என்று கூறலாம்.

திருவள்ளுவர் பெயர் பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகிய அனைத்தும் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கிபி இரண்டாம் நூற்றாண்டில் பிறந்திருக்கக் கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன மேலும் அவர் தற்போது சென்னையிலுள்ள மயிலாப்பூர் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் ஒரு தகவல் உண்டு.

மேலும் காவேரிப்பாக்கம் பகுதியில் வாழ்ந்த மார்கசியன் என்பவர் திருவள்ளுவரது கவித் திறனை நேரில் கண்டு பூரித்து தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மணமுடித்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழிற்கு பெருமை சேர்த்த அவரது மிகச்சிறந்த படைப்பு திருக்குறள் என்ற நூல். திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழில் நன்னெறி நூலாக உள்ளது.

திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்து இதனை ஜி.யூ.போப் என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரடிகளில் உலகின் தத்துவத்தை கூறி அனைவரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் கருத்தை பதித்துள்ளார். மொத்தம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் முறையை அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அறத்துப்பாலில் 38 அத்தியாயங்கள் , பொருட்பாலில் 70 அத்தியாயங்கள் மற்றும் காமத்துப்பாலில் 25 அத்தியாயங்கள் உள்ளது

அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் அறம் சார்ந்த வாழ்வியல் கருத்துக்கள் முதல் இல்லறம் போன்ற பல கருத்துக்களைக் கூறி அறத்தின் படி எவ்வாறு வாழ்க்கையினை முறை கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துகளை விவரித்துள்ளார்.

பொருட்பாலில் 70 அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன உட்பிரிவுகள் மூலம் அரசியல் ஊழல் மற்றும் துறவறிவியல் போன்ற கருத்துகளை இடம்பெற வைத்துள்ளார்.

காமத்துப்பால், களவியல் மற்றும் கற்பியல் என்ற உட்பிரிவுகள் மூலம் காதல் இன்பம் இல்லறம்  குறித்த கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று வகைப்பாட்டின் மூலம் வாழ்க்கையின் கருத்துக்களை கூறி வாழ்வின் உன்னதத்தை கூறி மக்களை நெறிப்படுத்திய புலவர் திருவள்ளுவர் உலகத்திற்கு அழியாத செல்வம் ஆன திருக்குறலை தந்து சென்றார்.

திருக்குறளின் சிறப்பு பெயர்கள், திருக்குறள் ஒருபொக்கிஷ இன்றுவரை கருதப்படுகிறது. அவற்றிற்கு பல சிறப்புப் பெயர்கள் உள்ளன, அவை  உலகப் பொதுமறை, முப்பால், ஈரடி நூல், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து.

திருவள்ளுவர் இறப்பு

தமிழ்ப் புலவரான திருவள்ளுவர் இறப்பு குறித்து இன்றுவரை அதிகாரப்பூர்வமான குறிப்புகள் இல்லை ஆனால் மயிலாப்பூரில் பிறந்து வளர்ந்த இவர்  ஒளவ்வையாரின் உதவியோடு மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கத்தில் திருக்குறளினை அரங்கேற்றினார் என்றும் நம்பப்படுகிறது.

திருவள்ளுவருக்கும் பல சிறப்புப் பெயர்களை பலரும் அழைத்தனர், அவை பொய்யில் புலவர், தெய்வப்புலவர், முதற்பாவலர், நான்முகனார், தேவநாயனார், பெருநாவலர்.

இன்று சென்னையில் உள்ள முக்கியமான இடம் வள்ளுவர் கோட்டம். வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவருக்காக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த குரல் மண்டபத்தில் திருக்குறளில் அனைத்து குறள்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று வரை தமிழக அரசு அதனை சிறப்பாக பேணிக் காத்து வருகிறது.

தமிழக மற்றும் இந்திய தேசத்தின் கடைகோடி கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் இவரது திருவுருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. திருவள்ளுவரின் நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களில் நினைவாக அந்த சிலையானது 133 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது அந்த சிலையை செய்த சிற்பி கணபதி ஸ்தபதி.

திருவள்ளுவருக்காக அவரது பிறப்பிடமாகக் கருதப்படும் மைலாப்பூர் எனும் இடத்தில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இன்று கூட அதனை நீங்கள் காண முடியும். அந்த கோவிலானது மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகில் உள்ளது. வள்ளுவரின் மண்டபம், வள்ளுவர் கோட்டம். வள்ளுவர் சிலை, கன்னியாகுமரி. வள்ளுவரின் கோயில். மயிலாப்பூர். மேலும் பல நாடுகளில் வள்ளுவனின் புகழ்ந்து பல சிலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |