தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூரில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தினமும் கொரோனா பாதிப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 911 ஆக இருந்தது. இதுவரையில் மொத்தம் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 58 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. ஈரோட்டில் முதியவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது” என்று கூறினார்.
தமிழகத்தில் இன்று புதிதாக பாதிக்கப்பட்ட 58 பேரில் அதிகளவாக திருவள்ளூரில் 16 பேருக்கும், நாகையில் 12 பேருக்கும், கோவையில் 11 பேருக்கும், சென்னையில் 10 பேருக்கும், கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.