பக்கத்து வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாயக்கன் பேட்டை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவரின் மனைவி, குழந்தைகள் மட்டும் ராமநாயக்கன் பேட்டையில் இருக்கும் வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.
அதன்பின் இவர்கள் உறவினர் வீட்டில் சுபநிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகை, 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் திருடு போனது அவருக்கு தெரியவந்துள்ளது. இது பற்றி கிருஷ்ணமூர்த்தி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் அருகாமையில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியதில் பக்கத்து வீட்டில் வசிக்கும் சந்தோஷ் குமார் என்பவர் மீது சந்தேகம் எழுந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர் நகை மற்றும் பணம் திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் குமாரை கைது செய்து அவரிடம் இருந்த 5 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.