திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை கோவை தனிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கோவையை அடுத்த துடியலூர் அருகே ஜி.எம்.ஸ் மில்ஸ், கவுண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்துள்ளது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்க வேண்டும் என்று காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
இதனை அடுத்து துடியலூர் காவல்துறை துணை ஆய்வாளர் அரவிந்தராஜன், சிறப்பு காவல்துறை துணை ஆய்வாளர் லூர்தராஜ் மற்றும் போலீசார் அனந்தீஸ்வரன், ராஜ்குமார், சுந்தர் போன்றோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக துடியலூர் பகுதியில் விசாரணை நடத்தியதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட உதய குமார் என்பவரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து 34 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்.