தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை திருத்தி அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட சுங்க கட்டண நடைமுறை வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ள சுங்க கட்டணம் வரும் ஒன்றாம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முப்பதாம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் என அறிவிக்க பட்டுள்ளது. இதன்படி ஆட்டோ உள்ளிட்ட மூன்று சக்கர வாகனங்களுக்கு ஒரு நடைக்கு பத்து ரூபாயும், திரும்பி வர 19 ரூபாயும், தினசரி கட்டணமாக 33 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3 சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பாஸ் 311 ரூபாயும், மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் 300 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கார்கள் ஒரு நடைக்கு 30 ரூபாயும், ஒரு முறை சென்று வர 60 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். கார்களுக்கு தினசரி கட்டணம் 100 ரூபாயாகவும், மாதாந்திர பாஸ் கட்டணம் 2390 ரூபாயாகவும், மாதாந்திர எல்.சி.எம் கட்டணம் 300 ரூபாயாகவும் நடை அடிப்படையிலான பாஸ் கட்டணம் 1,100 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலகு ரக வாகனங்கள் ஒரு நடை செல்ல 49 ரூபாய் கட்டணம், திரும்பிவர 98 ரூபாய். தினசரி 100 ரூபாய் என சுங்க கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.