Categories
Uncategorized ஆன்மிகம் இந்து கோவில்கள்

திருப்பதியில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு சலுகை…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் அந்த டிக்கெட்டுகளை பயன்படுத்தி தாங்கள் விரும்பும் நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் முதல் ஜூன் மாதம் வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் அஞ்சலகம் மற்றும் இ-தரிசன  கவுண்டர் மூலம் 300 ரூபாய்க்கான சிறப்பு தரிசனமும் சுப்ரபாதம், அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு முன்பதிவு செய்த பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலைகள் தரிசன டிக்கெட்டுகளை பக்தர்கள் ரத்து செய்தால் அதற்கான பணத்தை திருப்பி வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை ரத்து செய்யும் பக்தர்களுக்கு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் திருப்பிச் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் டிக்கெட்டை ரத்து செய்ய விரும்பாத பக்தர்கள் அந்த டிக்கெட்டை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் தாங்கள் விரும்பும் நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Categories

Tech |